முகப்பு பக்கம்
    குருஜி பற்றி
    நிர்வாகக் குழு  
    முதலீட்டாளர்கள்
    தொடர்பு கொள்ள 
    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
    வேலைவாய்ப்பு
    பத்திரிக்கைகள்
    குருஜி பற்றிய செய்திகள்
    குருஜியை எப்படி பயன்படுத்துவது : :
 
How to use
           
      1.0அறிமுகம்  
           
     
  • இந்த உதவிப் பக்கம், இணையத்தில் உள்ள தமிழ்மொழி பக்கங்களைத் தேட தங்களுக்கு( குருஜி உபயோகிப்பவர்கள்) உதவும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. நாங்கள், குருஜி குழு, எமது இணையதளத்தில் : http://www.guruji.com, தமிழ் சொற்களைக் கொண்டு தேடுவதில் ஒரு புதிய அனுபவத்தை நீங்கள் பெற வேண்டுகிறோம்.

    தேடல் பக்கத்தில் தமிழ் சொற்களை நீங்கள் இரண்டு வகையில் உபயோகப்படுத்தலாம் :   
  • தங்களது கணினியின் விசைப்பலகையில் உள்ள ஆங்கில எழுத்துக்களின் மூலம்
  • தங்களது கணினியின் மௌஸின் குறியீட்டைக் கொண்டு தேடல் பக்கத்திலுள்ள மாய விசைப்பலகையின் பொத்தான்களை அழுத்துவதன் மூலம்.

     தேடல் பக்கத்தில் தமிழ்ச் சொற்களை எளிதாக உபயோகப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்கங்களை நன்கு படிக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
    மாய விசைப்பலகையைக் கொண்ட குருஜி தேடல் பக்கம் கீழே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


  •  
     
               
          2.0 மாய விசைப்பலகையை நன்கு பழக்கப்படுத்திக்கொள்ள
     
        தமிழ் மாய விசைப்பலகையில் கீழ்க்கண்ட பொத்தான்கள் உள்ளன
  • உயிரெழுத்துக்கள்

         உதாரணம்:

  • மெய்யெழுத்துக்கள்

         உதாரணம்:

  • மாத்திரைகள்

         உதாரணம்:


    மெய்யெழுத்துக்கள் மற்றும் மாத்திரைகள் இணைந்து சொற்கள் உருவாகும் விதம்
     
    1. டு  = 
    2. தீ   = 
    3. பை =  


  •  தமிழ் எண்கள்
         உதாரணம்:



    தமிழ் எழுத்துக்களுக்கு நிகரான ஆங்கில எழுத்துக்களை நீங்கள் அறிய விரும்பினால், தமிழ் மாய விசைப்பலகையிலுள்ள பொத்தான்களின் மீது மௌஸின் குறியீட்டை செலுத்தவும்.இவ்வாறு செய்தால் படம் 2 ல் தோன்றுவது போல் தமிழ் எழுத்துக்களுக்கு நிகரான ஆங்கில எழுத்துக்கள் காட்சியளிக்கும். 



           படம் 2 தமிழ் எழுத்துக்கு நிகரான ஆங்கில எழுத்துக்களின் காட்சி.
    தங்களது உள்ளீடுகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் அளிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தேடல் பக்கத்தின் வலதுபுரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரேடியோ பொத்தான்களைக் (Radio button) கொண்டு,தங்களின் உள்ளீட்டு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு,நீங்கள் தமிழ் ரேடியோ பொத்தானைத் தேர்வு செய்தால்,தங்கள் கணினியின் விசைப்பலகையில் உள்ள ஆங்கில எழுத்துக்களை அச்சிடும் பொழுது அதற்கு நிகரான  தமிழ் எழுத்துக்கள் தேடல் உள்ளீட்டுப்பெட்டியில் காட்சியளிக்கும்.





    கணினி  விசைப்பலகையில் உள்ள F12 விசையின் மூலமும் தங்களது உள்ளீட்டு மொழியை (ஆங்கிலத்திலிருந்து தமிழ் மற்றும் மாற்றொழுங்கில்) தேர்வு செய்யலாம்.    
  •  
             
               
          3.0 மாய விசைப்பலகையைக் கொண்டு தமிழ் எழுத்துக்களை அளிக்க
    :
     
        கணினியில் உள்ள ஆங்கில விசைப்பலகையைக்கொண்டு தமிழ்ச் சொற்களை அச்சிடுவதில் நீங்கள் பழக்கப்படவில்லை என்றால் மாய விசைப்பலகையை உபயோகிக்கலாம்.சில சமயங்களில் விசைப்பலகையிலுள்ள ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் எழுத்துக்களை அச்சிடுவது கடினமாகக் கூடும்.அச்சமயங்களில் மௌஸின் குறியீட்டைக் கொண்டு மாய விசைப்பலகையில் உள்ள பொத்தான்களை அழுத்தி உள்ளீடு அளிக்கலாம்.
    உதாரணம்
    : நீங்கள்  "பௌர்ணமி" என்னும் உள்ளீட்டை அளிக்க விரும்பினால் கீழ்க்கண்ட பொத்தான்களை மாய விசைப்பலகையில் அழுத்தவும்:

    = பௌர்ணமி

    படம் 5,"பௌர்ணமி" என்னும் தமிழ் சொல்லுக்கான பொத்தான்களின் வரிசை முறை.
     
     
             
             
          4.0 தமிழ்ச் சொற்களை கணினியின் ஆங்கில விசைப்பலகையின் மூலம் அளிக்க :
     
       

    நீங்கள் கணினி விசைப்பலகையின் மூலம் அச்சிட பழக்கப்பட்டிருந்தால்,தமிழ்ச் சொற்களுக்கு நிகரான ஆங்கில எழுத்துக்களை விசைப்பலகையின் மூலம் அளிக்கலாம்.விசைப்பலகையில் அச்சிடுவதற்கு முன் சாளரம் (window) செயலில் உள்ளதா என்றும்,தேடல் பக்கத்தில் உள்ளீட்டுக் குறி (Input cursor) தேடல் உள்ளீட்டுப் பெட்டியினுள் (Input search box) உள்ளதா என்றும் சரிபார்க்கவும்.

    தமிழ் எழுத்துக்கள் மிகுதியாக உள்ள காரணத்தினால் சில தமிழ் எழுத்துக்களுக்காக ஆங்கிலத்தில் உள்ள பெரிய (upper case) எழுத்துக்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு விசைப்பலகையில் உள்ள Caps lock or Shift விசையை உபயோகிக்கவும்.பெரிய ஆங்கில எழுத்துக்கள் தேவைப்படும் தமிழ் எழுத்துக்கள் அட்டவணை 1 ல் கொடுக்கப்பட்டுள்ளது.     

    தமிழ்ச்சொல்

    நிகரான ஆங்கில எழுத்துக்கள்

     மஞ்சள்

    ma J ca L

     திண்டுக்கல்

    ti N du k ka l

     கோடீஸ்வரன்

    koo dii S va ra n

     அரண்மனை

    a ra N ma nai

     
         

     அட்டவணை 1,பெரிய ஆங்கில எழுத்துக்கள் (upper case) தேவைப்படும் தமிழ் எழுத்துக்கள். 


    கணினி விசைப்பலகையின் மூலம் ஆங்கில எழுத்துக்களை அச்சிடும் பொழுது அதற்கு நிகரான தமிழ் எழுத்துக்கள் தேடல் உள்ளீட்டுப் பெட்டியில் காட்சியளிக்கும்.அட்டவணை 2 ல் சில தமிழ் எழுத்துக்களும் அதற்கு நிகரான கணினி விசைப்பலகையின் ஆங்கில எழுத்துக்களும் உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளது.  

    நீங்கள் இந்த தமிழ்ச்சொல்லை அச்சிட விரும்பினால் இந்த ஆங்கில எழுத்துக்களை அச்சிடவும்

     இந்தியா

    i nh ti yaa

     பேட்டி

    pee d di

     பூமிகா

    puu mi kaa

     திராவிடர்கள்

    ti raa vi da r ka L

     மென்பொருள்

    me n po ru L

    தொழில்நுட்பம்

    to lhi l nhu d pa m

     சங்கம்

    sa g ka m

     ரிஷி

    ri shi

     ஸ்ரீரங்கம்

    Srii ra g ka m

     கௌதம் மேனன்

    kau ta m mee na n

     ஜனவரி

    ja na va ri

     தீக்ஷிதர்

    tii xi ta r

              அட்டவணை 2,தமிழ்ச் சொற்கள் மற்றும் அதற்கு நிகரான ஆங்கில எழுத்துக்கள்.
                  

       க   கா   கி   கீ   கு   கூ   கெ   கே   கை  கொ   கோ கௌ
       ka  kaa  ki  kii   ku  kuu   ke   kee   kai   ko  koo  kau
     

    இதுவரை படித்தமைக்கு நன்றி.மாய விசைப்பலகையிலும் தமிழ் எழுத்துக்களுக்கு நிகரான ஆங்கில எழுத்துக்களிலும் நன்கு பழக்கப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.தற்பொழுது தாங்கள் தேட நினைக்கும் தமிழ்ச் சொற்களை குருஜியின் தேடுதல் உள்ளீட்டுப் பெட்டியில் அளிக்கலாம்.தமிழ்ச் சொற்களை அளித்த பிறகு அதற்கான முடிவுகளைக் காண   என்னும் பொத்தானை  அழுத்தவும்.

    "சரித்திரம்" என்னும் தேடுதலுக்கான முடிவுப்பக்கம் படம் 7 ல் உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளது:   


          படம் 7 , "சரித்திரம்" என்னும் சொல்லுக்கான குருஜியின் மாதிரி முடிவுப் பக்கம்.  
     

    நீங்கள் தேடியதில் மேலும் தகவல் அறிய முடிவுகள் பக்கத்தில் உள்ள இணைப்புகளை சொடுக்கவும்.

    குருஜியில் தமிழ் சொற்களைக் கொண்டு தேடுவதில் சிறந்த அனுபவம் பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.தங்களின் பின்னூட்டங்களையும் கருத்துக்களையும் feedback@guruji.com   என்னும் முகவரியில் வரவேற்கிறோம்.