|
நிர்வாகக் குழு | ||||||||||
|
அனுராக் டோட்
முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் மென்பொருள் பொறியாளராக பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள இவர் இரண்டு வெற்றிகரமான மென்பொருள் நிறுவனங்களைத் தொடங்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இவர் வைஸ்நட் தேடல் பொறி என்னும் நிறுவனத்தில் பொறியியல் மேலாளராக பணியாற்றிய பொழுது, அதன் தேடல் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார். 2002-ல் வைஸ்நட்டை லுக்ஸ்மார்ட் என்ற நிறுவனம் கையகப்படுத்திக்கொண்டது. மேலும் ஈ-பே, சினாப்சிஸ் மற்றும் டெல்சாஃப்ட் போன்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார். அனுராக் ஐ.ஐ.டி தில்லியில் மின்பொறியியல் துறையில் பி.டெக் பட்டமும் ஆன் ஆர்போரில் உள்ள மிசிகன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். ஐஐடி தில்லியில் கல்வி கற்ற பொழுது கோடைக்கால இளநிலைப் பட்டதாரிக்கான ஆராய்ச்சி விருதினைப் பெற்றுள்ளார்.
கௌரவ் மிஷ்ரா
முதன்மை செயற்குழு அதிகாரி மற்றும் நிறுவனர் மென்பொருள் உற்பத்தித் துறையில் பத்து வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றியவர். மைக்ரோசாஃப்ட, பில்லர் டேட்டா சிஸ்டம்ஸ் மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்களில் மூத்த பொறியாளர் பதவி வகித்தவர். பின்னாளில் நோக்கியாவால் கையகப்படுத்தப்பட்ட இன்டெலிஸிங்க் நிறுவனத்தில் கௌரவ் பணியில் இருந்த பொழுது ப்ளாக்பெர்ரி, ட்ரியோ மற்றும் பல்வேறு பி.டி.ஏ-க்களில் பயன்படுத்தப்படும் இன்ஸ்டன்ட் மெஸ்ஸேஜிங் சொல்யூஷனை வடிவமைத்துள்ளார். வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த பெரிய நிறுவனங்களில், மிகக் கடினமான மென்பொருள்களைத் தயாரிப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளார். கௌரவ் ஐ.ஐ.டி தில்லியில் கணினி அறிவியல் துறையில் பி.டெக் பட்டமும் ஸ்டேட் யுனிவெர்ஸிடி ஆஃப் நியூயார்க், பஃப்பலோ-வில் அறிவியல் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். |