Guruji Home    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

முகப்புப் பக்கம்
குருஜி பற்றி
நிர்வாகக் குழு
முதலீட்டாளர்கள்
தொடர்பு கொள்ள
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வேலைவாய்ப்பு
பத்திரிகைகள்
குருஜி பற்றிய செய்திகள்
 

  1. வெப் மாஸ்டர் கேள்வி மற்றும் பதில்
  2. நகரத் தேடல் கேள்வி மற்றும் பதில்
  3. பொதுவான கேள்வி மற்றும் பதில்

வெப் மாஸ்டர் கேள்வி மற்றும் பதில் :-
  1. குருஜிபாட் ௭ன்றால் ௭ன்ன?
    குருஜிபாட் என்பது குருஜி வெப் க்ராளரின் பயன்பாட்டுக் கருவியாகும்.குருஜி அடுத்த தலைமுறைக்கான தேடல் பொறியை உருவாக்க இணையத்தை க்ராள் செய்து வருகிறது.

  2. நான் எப்படி எனது இணையதளத்தை குருஜியால் க்ராள் செய்யாமல் தடுப்பது?
    குருஜி நிறுவப்பட்ட ரோபட் எக்ஸ்க்லூஸன் வரைமுறையைப் பயன்படுத்திக் க்ராள் செய்கிறது.அந்த வரைமுறையை க்ராள் செய்யாமல் தடுத்தால் குருஜியால் க்ராள் செய்ய முடியாது. எடுத்துக்காட்டாக : குருஜிபாட் உங்கள் இணையதளத்தில் உள்ள /cgi கோப்பகத்தை (Directory) க்ராள் செய்யாமல் இருக்க இதனை robots.txt  கோப்பில் (File) சேர்க்கவும்:

    User-agent: GurujiBot
    Disallow: /cgi

    மேலும் தகவலுக்கு:  contact@guruji.com  . 
நகரத் தேடல் கேள்வி மற்றும் பதில் :-
  1. நகரத் தேடல் என்றால் என்ன?
    நகரத் தேடல் என்பது குருஜியின் கண்டுபிடிப்பு. இதன்மூலம் தங்களின் தேவைக்கேற்ப விவரங்களை மிக வேகமாக அளிக்கிறோம். மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், உணவு விடுதிகள் போன்ற தினசரித் தேவைகளுக்கான முக்கியத் தகவல்களைப் பெற வழிகாட்டியாக குருஜி உதவுகிறது.

  2. குருஜி எந்தெந்த நகரங்களின் தகவல்களை கொண்டுள்ளது ?
    குருஜி தற்பொழுது கீழ்காணும் நகரங்களின் தகவல்களை கொண்டுள்ளது :

    Bangalore Surat Goa Ludhiana Delhi
    Chandigarh Mangalore Chennai Noida Hyderabad
    Ranchi Kolkata Rajkot Mumbai Pune
    Thiruvananthapuram Gurgaon Varanasi Indore Jaipur
    Kanpur Vijayawada Tirunelveli Madurai Mysore
    Vadodara Jamshedpur Coimbatore Jodhpur Pondicherry
    Agra Bhopal Vizag  

    எல்லா நகரங்களின் தகவல்களையும் ஒரே விதமாகக் கொடுக்கவில்லை என்றாலும், நாங்கள் எங்களால் இயன்றளவு தகவல்களை முழுமையாகக் கொடுத்துள்ளோம். மேலும் பல நகரங்களின் தகவல்களைக் கொடுக்க முனைந்து வருகிறோம். தங்களுக்குத் தேவையான முக்கியமான வர்த்தகத்த்த்த் தகவல்கள் விடுபட்டு இருந்தால் தயக்கமின்றி எங்களுக்குத் தெரிவிக்கவும்.

பொதுவான கேள்வி மற்றும் பதில்:-
  1. நான் ஏன் இந்தியாவிற்குத் தொடர்பில்லாத தகவல்களை எனது தேடல் முடிவுகளில் பார்க்கிறேன் ?
    நாங்கள் இந்தியாவின் அனைத்துத் தகவல்களையும் குருஜியின் தேடல் பொறியில் கொண்டு வருவதையே லட்சியமாகக் கொண்டுள்ளோம். நீங்கள் எங்களுக்கு இந்தியா தொடர்பில்லாத இணையதளத்தின் முகவரியை கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும் feedback@guruji.com

  2. நான் எப்படி என் இணையதளத்தை குருஜியில் பார்ப்பது ?
    இந்தியா பற்றிய இணையதளத்தைச் சேர்க்க இந்தப் பகுதியை அணுகவும் submit url site நீங்கள் பதிவு செய்தவுடன் குருஜிபாட் உங்கள் இணையதளத்தை குருஜிபாட் உள்ளடக்கத்தில் சேர்த்துக் கொள்ளும். இதனை மூன்று அல்லது நான்கு வாரங்களில் குருஜி.காம்-ல் பார்க்க முடியும்.

  3. நான் என் இணையதளத்தை குருஜியில் சேர்த்துவிட்டேன். ஆனால் என்னால் அதைக் காண முடியவில்லை. ஏன் ?
     இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்:
    1) வெகு அண்மையில் நீங்கள் உங்கள் இணையதளத்தைப் பதிவு செய்து இருக்கலாம். அதனால் எங்கள் க்ராளர் அதனை இணைத்திருக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம். அதனால் நீங்கள் மூன்று அல்லது நான்கு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
    2) உங்கள் இணையதளம் இந்தியா தொடர்பானதாக இல்லாததால் குருஜிபாட் அதைத் தவிர்த்திருக்கக் கூடும்.

  • நான் எப்படி என்னுடைய வணிக முகவரியை உங்கள் தேடல் பட்டியலில் இணைப்பது?
    உங்கள் வணிக முகவரியை எளிதாக எங்களுக்குத் தெரிவிப்பதற்கான வசதி மிக விரைவில் வர இருக்கிறது.

  • என்னுடைய கருத்துக்களை உங்களுக்கு அனுப்ப என்ன செய்ய வேண்டும்?
    தங்களின் கருத்துக்கள:  feedback@guruji.comஎன்னும்  முகவரிக்கு அனுப்பவும்.



  • © 2009 Guruji.com